பொதுவாக விதவிதமான அங்கில எழுத்துருக்கள் இயல்பாகவே யுனிக்கோடில் கிடைக்கின்றன மேலும் தனியாகவும் வடிவமைக்கும் படியும் மென்பொருட்கள் உள்ளன. தமிழிலும் விதவிதமான எழுத்துருக்கள் வந்துகொண்டிருக்கையில் மேலும் ஒரு புது வடிவங்கள்... வெர்சுவல் வடிவில். இது உண்மையில் புதிய எழுத்துரு வடிவமில்லை ஆனால் பல எழுத்துருவைக் கொண்டு ஒரு எழுத்துரு போன்ற பின்பத்தை உருவாக்கும் முறை எனலாம்.

ஒவ்வொரு எழுத்தின் பிக்சலையும் வேறொரு எழுத்தால் நிரப்பி எழுதலாம்.
░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░
░░░▓▓▓▓▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓░▓░░░▓░░▓░▓░░░░▓▓░░▓░░░░▓▓░░▓▓▓▓▓░
░░░▓░░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
▓▓▓▓▓▓▓▓▓▓▓▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
░▓░░░░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
░░▓▓▓▓▓▓░░░▓░▓▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓▓░▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
இது சாதாரண " ▓ " மற்றும் " ░ " என்ற இரண்டு குறியீடுகளால் எழுதப்பட்ட கலவையே நீங்கள் விரும்பிய இரண்டு குறியீடுகளை தேர்வு செய்து எந்தவொரு தமிழ் எழுத்தையும் இனி எழுதலாம். நடைமுறையில் இவை வனப்பெழுத்து என்பதால் தொடர் பத்திகளில் எழுதப் போவதில்லை தானே. எங்காவது வாழ்த்துச் சொல்லவோ, வரவேற்கவோ, புகழ்ந்துகொள்ளவோ, மொக்கை போடவோ, கிரிடிங் கர்டில் படமாக்கவோ என்று இதற்கு வாழ்வு கொடுக்கலாம். அல்லது அந்த கிரிடிங் கார்டை யாரவது கொடுத்தால் வங்கிக் கொள்ளலாம்:).

அதற்கான செயலி தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது மென் கோலம்

இதில் நேரடியாக எல்லா தமிழ்ச் சொற்களையும் தட்டச்சிடலாம், Font Text என்கிற பெட்டியும் BG Text என்கிற பெட்டியும் தான் நீங்கள் விரும்பும் குறியீடுகள் கொடுக்குமிடம். வண்ணங்கள் பூசிக் கொள்ளலாம். HTML கோடுகளாக விரும்பினால் GETCODE பட்டன் மூலம் பெறலாம்.கடைசியில் உள்ள பட்டங்கள் மூலம் எழுத்தை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொள்ளலாம்.

இதன் குணங்கள் என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லை, ஆனால் சொல்லியே ஆக வேண்டிய இரண்டு விஷயம் உண்டு.
ன்று, இதை அப்படியே காப்பி செய்து HTML வடிவம் படிக்கும் எதிலும் பேஸ்ட் செய்யலாம், அல்லது கோடிங்கை எடுத்தும் பேஸ்ட் செய்யலாம். உதாரணமாக, MS office application எல்லாம், பிளாக் பதிவுப்பகுதி, இணையதளங்கள், மின்னஞ்சல்கள்...எனலாம். இங்கெல்லாம் அந்த எழுத்துவடிவம் உள்ளது உள்ளபடியே நிறம், திடம், சுவையுடன் பயன்படுத்தலாம்.
ரண்டு, பிளாக்கர் கமெண்ட் பகுதி, நோட்பேட், பேஸ்புக் போன்ற இடங்களில் நிறம்,திடம்,உயரம் ஆகியவற்றை காப்பிசெய்யமுடியாது அதனால் தேர்வு செய்யும் இரண்டு குறியீடுகளும் இயல்பான நிற/வடிவ வேறுபாடு கொண்டதாக இருக்கவேண்டும்.
அம்மாதிரி குறியீட்டு ஜோடிகள் சில
" ▓ " , மற்றும் " ░ "
" ▩ " மற்றும் " ▢ "
" ▉ " மற்றும் " ▂ "
" [ "," ] " மற்றும் " . ", " , "

அவ்வளவே,நீங்கள் கொடுக்கும் குறியீடு சமமான நீளத்தில் இருக்கவேண்டும் மற்றும் spaceயை குறியீடாகப் பயன்படுத்தினால் பிளாக்கர் கமென்ட் பகுதி உட்பட சில இடங்களில் பயன்படுத்தமுடியாது

சில மாதிரி கமெண்ட் வடிவங்கள் இங்கே இனி ப்ளாக் கமெண்டிலும் பயன்படுத்தலாம்.