சந்திப்பிழைகளைத் திருத்த " நாவி "என்கிற புதுச் செயலி அறிமுகமாகியுள்ளது தற்போது. தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், சந்திப் பிழைகளைத் திருத்தவும் 40%, 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது, மேலும் மேம்படுத்தப்படவும் உள்ளது, ஒரு மொழிக்குப் பிழை திருத்தி என்பது 100% செம்மையாக இருக்கமுடியாது, காரணம் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் கொண்டது வல்லமை. எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். இருந்தபோதும் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு மென்பொருளாலும் கணிக்கமுடியும் ஓரளவிற்குக். இச்செயலியில் வாக்கியத்தைப் போட்டு ஆய்வு செய் தட்டினால் பொத்தானைத்.வலிமிகும் இடங்களை ஆராய்ந்து பரிந்துரைக்கும். அதுபோக கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும். வலி மிகாத இடங்களில் தவறாக வலி மிகுந்தாலும் கொஞ்சம் கண்டுபிடித்துக் காட்டும். ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், கணிக்கமுடியாத வார்த்தைகள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடிக்கினால் [click] அதற்கான காரணத்தைக் காணலாம். மென் பரிந்துரை கூடுமானவரை பிழையற்று இருக்கும். சந்தேக வார்த்தைகளைக் கீழ் கண்ட விதிகளைப் படித்து நீங்களே உங்கள் விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக "சம்மதம்" என்கிற பொத்தானில் சம்மதத்தைக் கொடுத்ததும் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும்.பிழைகளைத் திருத்தவும், கற்றுக்கொள்ளவும் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.



நாவி


இச்செயலி பிறமொழிச் சொற்கள், உயர்திணைப் பெயர்கள், இடப்பெயர்கள் போன்ற எண்ணற்ற பெயர்களைக் கண்டுனராது. மற்றத் தமிழ் இலக்கண வரம்பிற்குட்பட வாக்கியங்களைப் பகுத்து சந்திப் பிழைகளைத் திருத்த முயலும் / பரிந்துரைக்கும். சரியான காற்புள்ளி, நிறுத்தப் புள்ளி, கேள்விக்குறி, தகுந்த இடைவெளி என முறையான வாக்கியமாக சிறப்பு இருந்தால். கொஞ்சம் தொல்காப்பிய / நன்னூல் இலக்கண விதிகளும், கவிக்கோ. ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பும், தமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்களும் இச்செயலின்  ஆதாரத்தரவுகளாகும்


பயன்படுத்திவிட்டு குறைகளையும், அபிவிருத்தி ஆலோசனைகளையும் வழங்குங்கள்.